Breaking News

நாட்றம்பள்ளியில் நடைபெற்ற குற்ற சம்பவ குற்றவாளிகளை 2 நாட்களில் கைது செய்த காவல்துறையினர்.


திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரூ 4 லட்சம் காரில் வந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் குறித்து நாட்றப்பள்ளி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா மற்றும் வாணியம்பாடி துணைக் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையிலான தனிப்படையினர் இணைந்து நாட்றம்பள்ளி காவல் ஆய்வாளர் மங்கையர்க்கரசி தலைமையில் சென்னையைச் சேர்ந்த ராமதாஸ் மகன் தேவராஜ் வயது 61 அரூர் பகுதியைச் சேர்ந்த மணி மகன் கோபி வயது 29 வேலூர் பகுதியைச் சேர்ந்த கருணாநிதி மகன் ராஜேஷ் பாபு வயது 50 ஆகிய மூன்று குற்றவாளிகளை நாட்றம்பள்ளி காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து அவர்களிடமிருந்து ரூ3.75 லட்சம் மீட்டுள்ளனர். குற்றவாளிகளை மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Copying is disabled on this page!