சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதர்சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் செல்வமுத்துக்குமாரசுவாமி, நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதியான அங்காரகன், தன்வந்திரி ஆகிய சுவாமிகள் தனி சந்நிதியில் அருள் பாலிக்கின்றனர்.
பிரசித்தி பெற்ற இக்கோயிலில் நாள்தோறும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து தரிசனம் செய்வது வழக்கம். இந்நிலையில் இக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய உண்டியல் பணம் என்னும் பணி நடைபெற்றது. முன்னதாக வைத்தியநாத ஸ்வாமி, தையல்நாயகி அம்பாள், செல்வமுத்துக்குமாரசுவாமி, அங்காரகன் உள்ளிட்ட சுவாமி சன்னதிகள் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 9 உண்டியல்களில் இருந்த காணிக்கைகள் கோயில் கட்டளை விசாரணை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர்கள் வீரவேல் பிரனேஷ்,ரவி ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம், காசுகள் தங்கம் வெள்ளி காசுகள் உள்ளிட்டவைகள் எடுத்து எண்ணப்பட்டது. பின்னர் இவை திருக்கோயில் வங்கி கணக்கில் சேர்க்கப்பட்டது.
No comments