புதுச்சேரி மின்துறையில் மின் நுகர்வோர் குறை தீர்ப்பு முகாம் நாளை ஜவகர் நகர் பூமியான்பேட் இயக்குதல் மற்றும் பராமரித்தல் அலுவலகத்தில் நடக்க உள்ளது.
புதுச்சேரி மின்துறையில் மின் நுகர்வோர் குறை தீர்ப்பு முகாம் நாளை ஜவகர் நகர் பூமியான்பேட் இயக்குதல் மற்றும் பராமரித்தல் அலுவலகத்தில் நடக்க உள்ளது.
மின்துறை செயற்பொறியாளர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி மின்துறையில் மின் நுகர்வோர் குறை தீர்ப்பு முகாம் நாளை 12ம் தேதி காலை 10:30 மணியில் இருந்து பகல் 12:30 மணி வரை, ரெட்டியார்பாளையம், ஜவகர் நகர், 2வது குறுக்கு தெருவில் உள்ள பூமியான்பேட் இயக்குதல் மற்றும் பராமரித்தல் அலுவலகத்தில் நடக்க உள்ளது.
மின் விநியோகம் பெறும் பூமியன்பேட் இளநிலை பொறியாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட மின் நுகர்வோர் குறை தீர்ப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு, மின் பட்டியல், குறைந்த மின் அழுத்தம், மின் மானிகளில் குறைபாடு, தெரு விளக்கு மற்றும் மின் நுகர்வு தொடர்புடைய குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளும்படி கேட்டு கொள்ளப்படுகிறது.
No comments