Breaking News

சிவகங்கையில் ராகுல் காந்திக்கு எதிரான பாஜகவினரின் வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.


சிவகங்கை மாவட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் எதிரில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், மக்களவை உறுப்பினர் திரு ராகுல் காந்தி அவர்களை கொல்ல மற்றும் காயம் ஏற்படுத்த வெறுப்பு பிரச்சாரம் மேற்கொண்ட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எச். ராஜா மற்றும் அக்கட்சியின் உயர் பதவிகளில் இருப்பவர்கள் மற்றும் அக்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரை வன்மையாக கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர், வழக்கறிஞர் திரு சஞ்சய் காந்தி அவர்களின் தலைமையிலும், காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். மாங்குடி அவர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது. 

மேலும் இந்நிகழ்வில் மாநில மகளிர் அணி துணை தலைவி ஸ்ரீவித்யா கணபதி, மானாமதுரை நகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர், நகர் மன்ற உறுப்பினர் திரு புருஷோத்தமன், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட அளவிலான அனைத்து பிரிவுகளை சேர்ந்த காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், நகர் காங்கிரஸ், வட்டார காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!