Breaking News

பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் மீது காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் காவல் கண்காணிப்பாளிடம் புகார்.


பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை கொலை செய்து விடுவதாகவும், நாக்கை அறுப்பவர்களுக்கு சன்மானம் எனவும், அவர் தீவிரவாதி எனவும் பாஜகவும் அதன் கூட்டணி கட்சியினரும் தொடர்ந்து மேடைகளிலும் பொதுவெளிகளிலும் பத்திரிக்கையாளர் சந்திப்பிலும் தெரிவித்து வருவதாக குற்றம் சாட்டிய காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர், ராகுல் காந்தி மீது இதுபோன்ற அவதூறு பரப்புபவர்களை கண்டிக்கும் விதமாகவும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மாநில தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன், முன்னாள் அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் தலைமையில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் வடக்கு காவல் கண்காணிப்பாளர் பாலச்சந்திரனை சந்தித்து புகார் மனு அளித்துள்ளனர். இதில் மாவட்ட தலைவர் ஆர்.பி.சந்திரமோகன் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். 

No comments

Copying is disabled on this page!