ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முன்னாள் அமைச்சர் ஷாஜகான் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் ஊர்வலமாக வந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்து அவதூறாக பேசிய பாஜக மற்றும் சிவசேனா நிர்வாகிகள் மீது இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி புதுச்சேரி காங்கிரஸ் சார்பில் 16க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக முன்னாள் அமைச்சர் ஷாஜகான் தலைமையில் கிழக்கு கடற்கரை சாலை சிவாஜி சாலை சதுக்கத்தில் ஒன்று திரண்ட காங்கிரஸ் கட்சியினர் கோஷமிட்டபடி லாஸ்பேட்டை காவல் நிலைய வரை பேரணியாக சென்று காவல் நிலைய ஆய்வாளரிடம் புகார் மனு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி காலாப்பட்டு தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் 100-க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
No comments