மயிலாடுதுறை அருகே குத்தாலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.
மயிலாடுதுறை அருகே குத்தாலம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர், நெல் மூட்டைக்கு 40 ரூபாய் வசூலிக்கப்படுகிறதா? என விவசாயின் குலதெய்வமான காத்தவராயன் மீது ஆணையாக சொல்லுங்கள் என கேள்வி எழுப்பினர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகாவில் மாவட்ட ஆட்சியர் முகாமிட்டு உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக இரண்டாவது நாளாக குத்தாலம் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தில் பார்வையிட்டு அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் மகளிர் சுய உதவி குழுவிற்கு கடன் உதவிகளை ஆட்சியர் வழங்கினார். அதனைத் தொடர்ந்து குத்தாலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நேரடியாக சென்று பார்வையிட்டார்.
மேலும் அங்குள்ள விவசாயிகளிடம் ஆட்சியர் கலந்துரையாடிய நிலையில் நெல் மூட்டை தலா ஒன்றுக்கு 40 ரூபாய் வீதம் வசூல் செய்யப்படுகிறதா? என கேட்டறிந்தார். அப்போது விவசாயி பணம் வசூலிக்கப்படுவதில்லை என விவசாயி தெரிவித்த நிலையில் அவரின் குலதெய்வ சுவாமியின் பெயரை கேட்டு காத்தவராயன் மீது சத்தியமாக வசூலிக்கப்படவில்லையா? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து விவசாயியும் சற்றும் முகம் சுழிக்காமல் காத்தவராயன் மீது ஆணையாக இங்கு நெல் மூட்டைக்கு பணம் வசூலிக்கப்படுவதில்லை என தெரிவித்தார். மேலும் லோடுமேன்கள் தவறு செய்வதாகவும் புகார்கள் ஏதேனும் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்கிருந்து அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட துணை ஆட்சியர் ஷபீர் ஆலம், ஆர்.டி.ஓ விஷ்ணுபிரியா உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.
No comments