புதுவையில் அனுமதியின்றி பொது இடங்களில் பேனர்கள், கட் அவுட்டுகள் மற்றும் கொடிகள் வைப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்படும்.
புதுச்சேரியில் அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள், கட் அவுட்கள் மற்றும் கொடிகள் அகற்றுவது தொடர்பாக கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்தில் உள்ளாட்சித் துறை, பொதுப்பணித்துறை, வருவாய் துறை, காவல் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
அனுமதியின்றி பொது இடங்களில் பேனர்கள், கட் அவுட்டுகள் மற்றும் கொடிகள் வைப்பவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், பேனர்கள் அகற்றுவதற்கான செலவின தொகையை சம்பந்தப்பட்டவர்களிடம் வசூலிக்க அறிவுறுத்தினர்.
அனுமதியின்றி பொது இடங்களில் பேனர்கள், கட் அவுட்கள் மற்றும் கொடிகள் வைத்துள்ளவர்கள் தாமாக முன் வந்து அகற்ற வேண்டும் என கலெக்டர் குலோத்துங்கன் வலியுறுத்தி உள்ளார்.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments