புதுப்பேட்டை சாலையில் உள்ள ரயில்வே தரை பாலம் ஆட்சியர் நேரில் ஆய்வு .
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி 30 வது வார்டு புதுப்பேட்டை சாலையில் உள்ள ரயில்வே தரை பாலம் பகுதியில் மழை காலங்களில் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சியளிப்பது அடிக்கடி வாடிக்கையாக இருந்து வந்தது.
மழைநீர் தேங்காத வண்ணம் அங்குள்ள தரைப்பாளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர் அதன் பேரில் 30 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் ஜீவிதா பார்த்திபனின் தொடர் முயற்சியின் காரணமாக தமிழக நெடுஞ்சாலை துறை சார்பில் 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நீர் வெளியேற்றும் அறை, மோட்டார் பம்ப் மற்றும் கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது.
நேற்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு உடன் மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், திருப்பத்தூர் கோட்டாட்சியர் ராஜசேகரன் கோட்ட பொறியாளர் முரளி தாசில்தார் ஆனந்த கிருஷ்ணன் உதவி கோட்ட பொறியாளர் மணிசுந்தரம், உதவி பொறியாளர் நித்தியானந்தன், நகர்மன்ற உறுப்பினர் ஜீவிதா பார்த்திபன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
No comments