புதுக்கோட்டை மாவட்டம் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்.
புதுக்கோட்டை மாவட்டம் மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் விழிப்புணர்வுக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர். அருணா, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டார்.
புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டுள்ள, மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் விழிப்புணர்வுக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை, மாவட்ட ஆட்சித்தலைவர். அருணா, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று பார்வையிட்டார்.
அதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர பாதுகாப்பு வைப்பறையில், புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் விழிப்புணர்வுக்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளதை, மாவட்ட ஆட்சித்தலைவர். அருணா, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேரில் பார்வையிட்டார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 15 ஆண்டுகளுக்கு முன்பாக தயாரிக்கப்பட்ட ஆ2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கழிவு நீக்கம் செய்வதற்காகவும், 2024 பாராளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவின் போது பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பெங்க;ர் பெல் நிறுவனத்தில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்பேரில், புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு வைப்பறையில் வைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேர்தல் விழிப்புணர்வாக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலத்திலிருந்து, மாவட்ட ஆட்சியரகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் வைக்கும் பொருட்டு, இன்றையதினம் புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள பாதுகாப்பு வைப்பறையும், மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையும், மாவட்ட ஆட்சித்தலைவர்அருணா,, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் திறக்கப்பட்டு பார்வையிடப்பட்டது.
இந்நிகழ்வுகளில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது).முருகேசன், தனி வட்டாட்சியர் (தேர்தல்).சோனை கருப்பையா, வட்டாட்சியர்.பரணி, அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.
No comments