மயிலாடுதுறை ஸ்ரீ செல்வ கணபதி ஆலய கும்பாபிஷேகம் மாவட்ட ஆட்சியர் மற்றும் ஆதீனம் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே மூங்கில் தோட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ கணபதி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது முன்னதாக யாக பூஜைகள் நடைபெற்று பூர்ணாகதியுடன் கடம் புறப்பட்டு கோவிலை வலம் வந்து கோபுர கலசத்திற்கு வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.
No comments