விநாயகர் சிலைகள் ஊர்வலம் செல்லும் முக்கிய பாதைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி விநாயகர் சிலைகள் ஊர்வலம் செல்லும் முக்கிய பாதைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி உட்கோட்டம் வாணியம்பாடி நகர பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு நடைபெறும் விநாயகர் சிலைகள் ஊர்வலம் செல்லும் முக்கிய பாதைகள் மற்றும் விநாயகர் சிலைகள் கரைக்கும் இடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ்,இ.ஆ.ப. மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயா குப்தா, இ.கா.ப., நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். உடன் வாணியம்பாடி கோட்டாட்சியர் பொறுப்பு அமுதன், வாணியம்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் வாணியம்பாடி போக்குவரத்து காவல் ஆய்வாளர் உள்ளனர்.
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஆம்பூர் உட்கோட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பாதுகாப்பு பணியை நேரில் ஆய்வு செய்தார். இதில் ஆம்பூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் மற்றும் காவல் ஆய்வாளர் உடன் இருந்தனர். என்பதை மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
No comments