உளுந்தூர்பேட்டை அருகே மாட்டு கொட்டாயில் கொடிய விஷம் கொண்ட 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பு பிடிபட்டது.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உளுந்தாண்டார் கோவில் கிராமத்தில் மாட்டு கொட்டாயில் கொடிய விஷம் கொண்ட 7 அடி நீளமுள்ள நல்ல பாம்பு இருந்தது அதை தீயணைப்பு படை வீரர்கள் பிடித்து காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உளுந்தாண்டார் கோவில் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யனார் விவசாயியான இவர் தனது வீட்டின் அருகில் மாட்டு கொட்டையில் மாட்டுக்கு தீவனம் வைக்கும் சென்ற பொழுது அங்கு சுமார் 7 அடி நீளம் கொண்ட கொடிய விஷத்தன்மை வாய்ந்த நாகப்பாம்பு இருந்தது இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அய்யனார் அங்கு இருந்தவர்களிடம் கூறிய நிலையில் இது குறித்து உடனடியாக உளுந்தூர்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் நிலைய அலுவலர் அசோக்குமார் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து சென்று மாட்டு கொட்டையில் இருந்த 7அடி நீளம் கொண்ட நல்ல பாம்பை நவீன கருவி மூலம் உயிருடன் பிடித்து அதனை எடைக்கல் காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர்.
No comments