Breaking News

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில் உள்ள கோ – ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்க நிகழ்ச்சி.


மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடியில் உள்ள கோ – ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை துவக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி.மகாபாரதி  முதல் விற்பனையை தொடங்கி வைத்தார்.

       
தீபாவளி சிறப்பு விற்பனையை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்  தெரிவித்ததாவது: தமிழக அரசின் தலைமை கூட்டுறவு நிறுவனமாக “கோ-ஆப்டெக்ஸ்” கடந்த 89 ஆண்டுகளாக தமிழக கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பாரம்பரியமான துணி இரகங்களை இந்தியா முழுவதும் உள்ள “கோ-ஆப்டெக்ஸ்” விற்பனை நிலையங்கள் மூலமாக அனைவரும் பயன்பெறும் வகையில் விற்பனை செய்து நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயர முக்கிய பங்களித்து வருகிறது.

காலத்திற்கேற்ற வகையில் புதிய உத்திகளை கையாண்டு பல புதிய வடிவமைப்புகளில் “கோ-ஆப்டெக்ஸ்” சேலைகள் மற்றும் இதர இரகங்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.

கோ-ஆப்டெக்ஸ் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி விற்பனை நடைபெற்று வருகின்றது. இந்த சிறப்பு விற்பனைக்காக புதிய வடிவமைப்புடன் கூடிய கோவை மென்பட்டு சேலைகள், சேலம் பட்டுப் புடவைகள், காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம் போன்ற ஊர்களில் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுப் புடவைகள், கோவை கோரா காட்டன் சேலைகள், நெகமம் பருத்தி சேலைகள், பரமக்குடி பருத்தி சேலைகள், அருப்புக் கோட்டை பருத்தி சேலைகள், மதுரை பருத்தி சேலைகள், மணல்மேடு பருத்தி சேலைகள், திருநெல்வேலி செடிபுட்டா சேலைகள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நெசவாளர்கள் கைவண்ணத்தில் உருவான பருத்தி சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், மெத்தை, இளவம் பஞ்சு தலையணை உறைகள், வேட்டி, லுங்கி, துண்டு ரகங்கள், பருத்தி சட்டைகள், திரை சீலைகள், கால்மிதியடிகள், நைட்டிஸ், மாப்பிள்ளை செட் மற்றும் ஏற்றுமதி ரகங்கள் ஏராளமாக தருவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி 2024 பண்டிகையை முன்னிட்டு கடலூர் மண்டலத்திற்கு ரூ.10 கோடி விற்பனை குறியீடாகவும், அதில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை விற்பனை நிலையத்திற்கு ரூ.80 இலட்சமும் மற்றும் சீர்காழி விற்பனை நிலையத்திற்கு ரூ.35 இலட்சமும் விற்பனை குறியீடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்புத் திட்டத்தின்படி (ஊஆளுளு), வாடிக்கையாளர்களிடம் மாதந்தோறும் ரூ.300 முதல் ரூ.3000 வரை 11 மாத தவணைகள் மட்டும் பெறப்பட்டு 12 வது மாத தவணையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்துவதுடன் கூடுதல் சேமிப்புடன் பருத்தி மற்றும் பட்டு இரக துணிகளை வாங்கி பயன்பெறலாம்.

தீபாவளி சிறப்புத் தள்ளுபடி 30 சதவீத வசதியுடன் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு சார்பு ஊழியர்களுக்கு தவணை முறை கடன் விற்பனை வசதியும் உண்டு. எனவே, அனைத்து துறை ஊழியர்களும் கைத்தறிக்கு கைகொடுத்து உதவிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் பா.சுப்ரமணியன், மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராணி  மயிலாடுதுறை கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் மதன், ரெட் கிராஸ் நிர்வாகி இளங்கோவன் மற்றும் அலுவலக ஊழியர்கள், விற்பனை நிலைய ஊழியர்கள்,  ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!