Breaking News

மயிலாடுதுறை மாவட்டத்தில் உழவர் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்.


மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சரக வருவாய் ஆய்வாளர் அலுவலகத்திலும் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ்  சிறப்பு முகாம் நடத்தி பொதுமக்களிடமிருந்து உதவி தொகைக்கான மனுக்கள் பெற்றிட மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவிடப்பட்டது.

தரங்கம்பாடி வட்டம் செம்பனார்கோயில் சரக வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் மயிலாடுதுறை  மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை ஆட்சியர் கீதா  அவர்களால் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது. இம்முகாமில்  முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ்  குடும்பத் தலைவர் உறுப்பினர் இறப்பிற்கான  இறப்பு உதவித்தொகை, குடும்ப உறுப்பினர்களாக உள்ள மகள் /மகன் திருமண உதவித்தொகை, தற்காலிக இயலாமைக்கான உதவித்தொகை மற்றும் கல்வி பயிலும் மாணவ மாணவியர்களுக்கான கல்வி உதவித்தொகை  குறித்த மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. 

இம் முகாமில்  தரங்கம்பாடி சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் பாபு, வருவாய் ஆய்வாளர் கலைவாணி , கிராம நிர்வாக அலுவலர்கள் திலக்ராஜ், சிவராமகிருஷ்ணன் அசாருதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments

Copying is disabled on this page!