தூய்மை பணி இரு வார துவக்க விழாவின் ஒரு பகுதியாக தவளக்குப்பத்தில் நடைபெற்ற தூய்மை விழிப்புணர்வு குறித்த பேரணியை சபாநாயகர் செல்வம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு புதுச்சேரி அரசு உள்ளாட்சித் துறை மற்றும் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பாக தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை பணி இரு வார தூவக்க விழா நிகழ்ச்சி இன்று தவளக்குப்பம் பகுதியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவை தலைவர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தூய்மை விழிப்புணர்வு குறித்த பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்து தூய்மை குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசாரங்களை பொதுமக்களிடம் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், உதவி பொறியாளர் நாகராஜ், இளநிலை பொறியாளர்கள் சுரேஷ் சரஸ்வதி மற்றும் பாஜக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments