Breaking News

தூய்மையே சேவை இருவார நலப்பணியையொட்டி பொதுமக்களிடையே தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.


புதுச்சேரி அரசு உள்ளாட்சி துறை மற்றும் நகராட்சிகளின் சார்பில் "தூய்மையே சேவை இருவார நலப்பணி" கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று  தொடங்கி இரு வார காலத்திற்கு நகரம் முழுவதும் பல்வேறு தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன.

இதன் தொடக்க விழா புதுச்சேரி கடற்கரைச் சாலையில் இன்று  நடைபெற்றது.முதலமைச்சர் ரங்கசாமி நிகழ்ச்சியினை கொடியசைத்து தொடங்கி வைத்து தூய்மையே சேவை உறுதி மொழியினை முன்மொழிய அனைவரும் ஏற்றுக் கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து நாடு தழுவிய ஒரு மணி நேர தூய்மை பணியினை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.‌ பின்னர்  "தூய்மையே சேவை இருவார நலப்பணியையொட்டி பொதுமக்களிடையே தூய்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை முதல்வர் ரங்கசாமி  தொடங்கி வைத்தார்

இந்த நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், தலைமைச் செயலர் Dr.சரத் சவுகான் உட்பட அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நூற்றுக்கணக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர், நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவியர், சமூக அமைப்பினர், திருநங்கையர், தூய்மைப் பணியாளர்கள், நகராட்சி பணியாளர்கள், தன்னார்வலர்கள் பலர் இத்தூய்மைப் பணியில்  ஈடுபட்டனர்.


- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி 

No comments

Copying is disabled on this page!