பெரியபாளையம் அருகே ஏலச்சீட்டு நடத்தி பல லட்ச ரூபாய் மோசடி செய்து தலைமறைவான நபர் மீது நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை.
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த நெய்வேலி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (50). மளிகை கடை நடத்தி வரும் ரமேஷ் மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தார். பல ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்த ரமேஷிடம் ஒரு லட்சம், 2 லட்சம் என பலர் சீட்டு கட்டி வந்துள்ளனர். இந்நிலையில் திடீரென பணத்தை திருப்பி தராமல் மோசடி செய்து கிராமத்தை விட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். அப்போது இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளிக்குமாறு அவர்களிடம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஏலச்சீட்டு என்பதால் சிறுக சிறுக சேமித்த பல லட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்து தலைமறைவான நபரை தேடி பணத்தை மீட்டு தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments