உளுந்தூர்பேட்டை நகராட்சி கூட்ட அரங்கில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி கூட்ட அரங்கில் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்றது. இதில் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு குறித்தும், குழந்தை திருமணங்கள் தடுத்தல் மற்றும் விழிப்புணர்வு குறித்து விளக்கிப் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் வைத்தியநாதன், நகராட்சி ஆணையர் இளவரசன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரி, குழந்தைகள் நல குழு தலைவர் சந்தோஷ்குமார், புறத் தொடர்பு பணியாளர் அலமேலு, நகர மன்ற உறுப்பினர்கள் கலா சுந்தரமூர்த்தி, செல்வகுமாரி ரமேஷ்பாபு, மகேஸ்வரி ரமேஷ், வாசுகி நடராஜன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர்கள் தொல்காப்பியன், பத்மநாபன் ஊராட்சி மன்ற தலைவர் மருதுபாண்டி, மற்றும் மணிகண்டன், முத்துக்குமரன், பள்ளி தலைமை ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தனியார் தொண்டு நிறுவன நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.
No comments