முதல்வர் கோப்பைக்கான செஸ் போட்டி தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்றது!
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், முதல்வர் கோப்பைக்கான செஸ் போட்டிகள் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் நடைபெற்றது. இதில் மாணவிகளுக்கான செஸ் போட்டியை காமராஜ் கல்லூரி செயலர் சோமு துவக்கி வைத்தார். மாணவர்களுக்கான போட்டியை மாவட்ட சதுரங்க கழகத் தலைவர் ஜோ பிரகாஷ் துவக்கி வைத்தார். இந்தப் போட்டியின் தலைமை நடுவராக காமராஜ் கல்லூரியின் பேராசிரியை கற்பகவல்லி பணியாற்றினார். போட்டியில் 261 மாணவர்களும், 120 மாணவிகளும் கலந்து கொண்டனர்.
இந்தப் போட்டியில் மாணவர்கள் பிரிவில் புனித தாமஸ் பள்ளியை சேர்ந்த மாணவர் ஸ்டான்லி பிளஸ்சிங் முதல் இடமும், சி.வ. அரசுப் பள்ளி மாணவர் முகமது அர்ஷத் 2ம் இடமும், பாரதரத்னா காமராஜ் பள்ளி மாணவர் மணிஷ்வர் 3ம் இடமும் பிடித்தனர். மாணவிகள் பிரிவில் சுப்பையா வித்தியாலயம் பெண்கள் பள்ளி மாணவி மேகலா முதல் இடமும், மாநகராட்சி பள்ளியை சேர்ந்த மாணவி முனீஷ்வரி 2ம் இடமும், விக்டோரியா பெண்கள் பள்ளி மாணவி பிரிய வர்ஷினி 3ம் இடத்தையும் பிடித்தனர்.
முதல் மூன்று இடம் பிடித்த மாணவ, மாணவிகள், தமிழ்நாடு மாநில போட்டிக்கு தூத்துக்குடி வருவாய் மாவட்டம் சார்பில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அதிகாரி அந்தோணி அதிர்ஷ்டராஜ் செய்திருந்தார்.
No comments