காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநர் சிவராஜ்குமார் அறிவுறுத்தல்.
காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குநர் சிவராஜ்குமார் அறிவுறுத்தல். இது குறித்து காரைக்கால் நலவழித்துறை துணை இயக்குனர் சிவராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் "பருவ மழைக்காலம் தொடங்கவுள்ளது.
இத்தருணத்தில் காய்ச்சல் அதிகமாக பரவவாய்ப்புள்ளது. இது 2 அல்லது 3 நாட்கள் மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும், அச்சம் தேவையில்லை. காய்ச்சலானது உடல் வலி, தலை வலியுடன் காணப்படும். சளி, இருமல் இருக்கும். சிலருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்படும்.
அதனால் குளிர்ந்த நீர், குளிர் பானங்களை தவிர்த்து, கொதிக்க வைத்த தண்ணீர் அருந்த வேண்டும். செரிமானமாகக்கூடிய உணவு வகைகளை மட்டும் சாப்பிட வேண்டும். காய்ச்சல் வந்தால் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற வேண்டும். சுய மருத்துவம் கூடாது எனவும், டெங்கு காய்ச்சல் தேங்கியிருக்கு தண்ணீரில் உருவாகும் கொசுவால் ஏற்படக்கூடியதாகும்.
எனவே, தண்ணீர் தேங்கக்கூடிய பொருட்கள் எதுவாயினும் அதனை அகற்ற வேண்டும். தண்ணீர் தொட்டிகள் திறந்திருந்தால் டெங்கு கொசு உற்பத்தியாகும். எனவே எத்தகைய காய்ச்சலாக இருந்தாலும் காலதாமதமின்றி மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றார்.
No comments