Breaking News

ஆசிரியையை வழிமறித்து 7 பவுன் நகையை வழிப்பறி செய்த டிப் டாப் ஆசாமி.


உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆர்.ஆர்.குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின்  ஆசிரியை இ-பைக்கில் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த பொழுது அந்த கிராமத்தில் உள்ள வயல்வெளி பகுதியில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க தலைக்கவசம் அணிந்திருந்த டிப்டாப் ஆசாமி ஒருவர் ஆசிரியையை வழிமறித்து நிறுத்தி அவர் அணிந்திருந்த 7 சவரன் தங்க செயின்களை பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சேர்ந்தவர் அருள்தேவி இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆர்.ஆர்.குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியை ஆகப் பணியாற்றி வருகிறார். உளுந்தூர்பேட்டை நகரில் வாடகை வீட்டில் தங்கிக் கொண்டு தினசரி தனது இ-பைக்கில் அருள்தேவி பள்ளிக்கு சென்று வருவது வழக்கம் இந்த நிலையில் வழக்கம்போல் இன்று செவ்வாய்க்கிழமை காலை தனது இ-பைக்கில் ஆசிரியை சென்று கொண்டிருந்த நிலையில் உளுந்தூர்பேட்டை - சேலம் புறவழி சாலையை அவர் கடக்க முயன்ற பொழுது சேலம் மார்க்கத்திலிருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் தலைக்கவசம் அடைந்தபடி அதிவேகமாக வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க டிப்டாப் இளைஞர் அருள்தேவியின் இ-பைக்கில் மோதுவது போல் வந்துள்ளார் அப்போது சுதாகரித்துக் கொண்ட அருள்தேவி தனது இ-பைக்கை நிறுத்தி அடையாளம் தெரியாத அந்த இளைஞர் ஒட்டி வந்த இருசக்கர வாகனம் சென்ற பின்பு சாலையைக் கடந்து ஆர்.ஆர்.குப்பம் கிராமத்துக்கு செல்லும் பாதையில் சென்று கொண்டிருந்தார் அப்பொழுது சிறிது தூரம் அருள்தேவி சென்ற நிலையில் அவர் மீது மோதுவது போல் வந்த இருசக்கர வாகனம் அவரைக் கடந்து சென்று பின்னர் அதே வழியில் திரும்ப வந்தது ஆசிரியை அருள்தேவி வந்த இ-பைக்கை நிறுத்தி கண்ணியமைக்கும் நேரத்தில் அருள்தேவி கழுத்தில் அணிந்திருந்த ரூபாய் 4 லட்சம் மதிப்பிலான 7 சவரன் எடை கொண்ட இரண்டு தங்கச் செயின்களை பறித்துக் கொண்டு அந்த இளைஞர் அதிவேகமாக தப்பிச் சென்றார் அப்பொழுது ஆசிரியை அலறி அடித்துக் கொண்டு தனது தங்கச் செயின்களை தலைக்கவசம் அணிந்த இளைஞர் பறித்துச் சென்றதாக கூச்சலிட்டுள்ளார் எதை எடுத்து அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அங்கு வந்து உடனடியாக உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.


அதன் பேரில் அங்கு போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்து ஆசிரியை அருள்தேவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த உளுந்தூர்பேட்டை போலீசார் உளுந்தூர்பேட்டை சேலம் புறவழி சாலை பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட்டு வழிப்பறி கொள்ளையனை தேடி வருகின்றனர்.


பட்டம் பகலில் எப்போதும் ஆள் நடமாட்டம் அதிகம் கொண்ட ஆர்.ஆர்.குப்பம் கிராம சாலையில் வயல் வெளி சாலையில் இ-பைக்கில் சென்று கொண்டிருந்த அரசு பள்ளி ஆசிரியை வழிமறித்து 7 சவரன் தங்க செயின்களை தலைக்கவசம் அணிந்தவாறு இருசக்கர வாகனத்தில் வந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க மர்ம ஆசாமி பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments

Copying is disabled on this page!