Breaking News

மீனவர்கள் மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. எல்.முருகன் பேட்டி.


முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் சுவாமி தரிசனம் செய்ய வருகை தந்தார். அவர் கோவிலில் மூலவர், வள்ளி தெய்வானை, தெட்சினாமூர்த்தி, சத்ரூ சம்கார மூர்த்தி ஆகியோரை வணங்கினார். அதைத் தொடர்ந்து சத்ரூ சம்கார மூர்த்திக்கு சிறப்பு பூஜை செய்த அவர், வள்ளிக்குகை பகுதியில் சத்ரூ சம்கார யாகத்தில் ஈடுபட்டார். 

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், மீனவர்கள் மீட்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதற்காக வெளியுறவுத்துறை மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீனவர்கள் நலனுக்காக ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைள் மேற்கொண்டு வருகிறது. துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் வந்தால் என்ன மாற்றம் நடக்க போகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. 

வெளிநாடு சென்று திரும்பியது முதலீடு குறித்து கேட்பார்கள் என்பதை மறைப்பதற்காகத்தான் விசிக மது ஒழிப்பு மாநாட்டை நடத்துகிறார்கள். இது ஒரு ஏமாற்று வேலை. ஒரே நாடு ஒரே தேர்தல் தேவை. எங்கள் கட்சியில் எந்த கட்சி பூசலும் இல்லை. தற்போதும் எங்கள் பாஜக தலைவர் அண்ணாமலை தலைவராக இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.

- திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ் 

No comments

Copying is disabled on this page!