Breaking News

புதுவை உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட மறைமலை அடிகள் சாலை முதல் திருவள்ளுவர் சாலை வரை புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை தொகுதி எம்எல்ஏ நேரு பூஜை செய்து தொடங்கி வைத்தார்.


உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட மறைமலை அடிகள் சாலை முதல் திருவள்ளுவர் சாலை வரை ரூபாய் 62 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினை தொகுதி எம்எல்ஏ நேரு பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலத்துறை பேட்கோ மூலம் உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட மறைமலை அடிகள் சாலை முதல் திருவள்ளுவர் சாலை வரை ரூபாய் 62 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியின் துவக்க விழா இன்று நடைபெற்றது.

இதில், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார். மேலும் விரைந்து பணிகளை முடிக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை பேட்கோ அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் மனிதநேய மக்கள் சேவை மைய நிர்வாகிகள் உட்பட பகுதி மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி

No comments

Copying is disabled on this page!