திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு 17.9.2024 செவ்வாய்கிழமை மற்றும் 18.9.2024. புதன்கிழமை மாலை வரை சிறப்பு தரிசனம் அனுமதி ரத்து. கோவில் நிர்வாகம் அறிவிப்பு.
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலுக்கு தினம் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். மேலும் திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள். கடந்த சில மாதங்களாக பௌர்ணமி நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
இந்த நிலையிப் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருகிற புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு 17.9.2024 செவ்வாய்கிழமை மற்றும் 18.9.2024. புதன்கிழமை மாலை வரை சிறப்பு தரிசனம் அனுமதி கிடையாது என்று கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பொது தரிசனத்தில் எப்போதும் போல் தரிசனம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்செந்தூர் தாலுகா செய்தியாளர் பெ.முகேஷ்
No comments