Breaking News

புதுச்சேரி மின் கட்டண உயர்வை கண்டித்து காரைக்கால் மாவட்டத்தில் வருகின்ற 18ஆம் தேதி முழு பந்த். இந்தியா கூட்டணி கட்சிகள் அழைப்பு.


புதுச்சேரி மாநிலத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை கண்டித்தும் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் காரைக்கால் மாவட்டத்தில் இந்தியா கூட்டணி சார்பில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி காரைக்கால் மாவட்டத்தில் வருகின்ற 18ஆம் தேதி முழு பந்த் போராட்டம் நடத்தப்படும் என்றும் முழு பந்த் போராட்டத்திற்கு இந்திய கூட்டணி சார்பில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக திமுக எம்எல்ஏ நாஜிம் தெரிவித்தார். 

அப்போது புதுச்சேரி முன்னாள் அமைச்சர் ஏ வி சுப்பிரமணியன் காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் சந்திரமோகன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் ரஞ்சித், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மதியழகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தமிம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கலைவாணன், தமுமுக சார்பில் பயாஸ் உள்ளிட்ட ஏராளமான இந்தியா கூட்டணி பொறுப்பாளர்கள் கலந்து  கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!