Breaking News

பாரதீஸ்வரர் கோயில் நில அபகரிப்பு வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் முன்னாள் எம்.பி. ராமதாஸ் காரைக்காலில் பேட்டி


புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் காரைக்கால் மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கும் பணிக்காக இன்று காரைக்கால் வந்திருந்த முன்னாள் எம்.பி-யும் புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். "காரைக்கால் கோவில்பத்து பார்வதீஸ்வரர் கோவில் நிலம் அபரிகபடுள்ளது ஆதாரங்கள் மூலம் நிறுபனம் ஆகி உள்ளதாகவும், அரசு அதிகாரிகள் ஒத்துழைப்புடன் நிலம் மோசடி நடைபெற்று உள்ளதாகவும், அரசு வெளியிட்டது போல மோசடி நடைபெற்று உள்ளது என துணை ஆட்சியர் ஜான்சன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். 

ஒரு தனி நபர் எவ்வாறு அரசு ஆணை போல் வெளியிட முடியும் எனவும் எமாற்று வேளையில் ஈடுபடும் தனி நபர் மோசடி நபர்கள் அரசு ஆணை போல் அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு இல்லாமலா எப்படி மோசடி நடைபெற்று இருக்கும் என கேள்வி எழுப்பினார். மோசடி நபர்களுக்கு பின்னால் அரசியல் பின்புலம் உள்ளதாகவும் மோசடி நபர்களுக்கு ஆதரவாக அரசு அதிகாரிகள் ஆவணங்களை தயார் செய்து உதவி புரிந்துள்ளதாகவும் தெரிவித்த அவர் இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைப்பதோடு, உயர்நீதி மன்ற மேற்பார்வையில் விசாரணை நடைபெற்று தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று கூறினார். 


காரைக்காலில் உள்ள பி.ஆர்.டி.சி பணிமலையல் 30 பேருந்துகள் இருந்தும் சரிவர இயக்கப்பட வில்லை எனவும் கடந்த ஆறு மாதமாக கிளை மேலாளர் இல்லாமல் இயங்கி வருவதாகவும், ஓட்டுனர் மற்றும் நடத்துநர் கிளை மேலாளர் இல்லாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்தார். புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இதனால் கிராமப்புற பகுதி வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார். 

No comments

Copying is disabled on this page!