Breaking News

ஆற்காடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை சார்பில் 2.28 கோடி மதிப்பிலான 6 புறநகர் பேருந்துகளை அமைச்சர் ஆர் காந்தி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.


ராணிப்பேட்டை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் .ஆர். காந்தி அவர்கள் இன்று  இராணிப்பேட்டை மாவட்டம். ஆற்காடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை சார்பில் ரூ.2.28 கோடி மதிப்பீட்டிலான 6 புதிய புறநகர் பேருந்துகளை அமைச்சர் காந்தி கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். 


உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர். ஜெ.யு. சந்திரகலா. இ.ஆ.ப., ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன். மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர். ஜெயந்தி திருமூர்த்தி, போக்குவரத்து கழகம் வேலூர் மண்டல பொது மேலாளர்  கணபதி. நகரமன்றத் தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன். ஒன்றியக் குழுத் தலைவர்கள்  புவனேஸ்வரி சத்தியநாதன். அசோக், தொ.மு.ச. திரு. ரமேஷ். வட்டாட்சியர் பாக்கியலட்சுமி, நகர செயலாளர் ஏ.வி.சரவணன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் K.P.வெங்கடேசன் மற்றும் திமுகவினர் உடனிருந்தனர்...

No comments

Copying is disabled on this page!