வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே அரசு பேருந்து மோதி இருவர் பலி.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே செட்டிக்குப்பதை சேர்ந்த தமிழ் இனியன் என்பரின் மகன் T. ஸ்டேன்லி (25) நேற்று இரவு 7 மணியளவில் பரதாமிக்கு சென்று வீடு திரும்பும் வழியில் கல்லப்பாடி ஸ்ரீராமுலுப்பட்டி அருகே அவ்வழியாக வந்த அரசு பேருந்து மோதியதில் T. ஸ்டேன்லி சம்பவடத்திலே தலை நசுங்கி உயிரிந்தார் இவருடன் பயணித்த வினோத்குமார், தாவூத், பிரவின், ஆகிய மூவரும் படுகாயம் அடைந்தனர்.
குடியாத்தம் காட்பாடி டீச்சர்ஸ் காலனியை சேர்ந்த கரிகாலன் மகன் வினோத்குமார் (22)என்பவர் இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்ததில் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழிலியே இறந்ததாக கூறப்படுகிறது, சித்தூர் கேட் பகுதியை சேர்ந்த தாவூத் (30) சேத்துவண்டை அன்னை சத்தியா நகரை சேர்ந்த பிரவின்( 20) ஆகிய இருவரும் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரியவந்தது.
இது குறித்து தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த பரதாமி காவல்துறையினர் உடலை கைப்பற்றி குடியாத்தம் அரசு மருதவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்ட பின்னர் ஸ்டேன்லி, வினோத், தாவூத், சத்தியா இவர்களின் வீட்டிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு பின்னர் இன்று உடர்கூற்வு ஆய்வு நடத்தப்பட்டு பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்று தெரிவித்தனர், எனவே இச்சம்பவதால் செட்டிக்குப்பம் மக்களிடையே பேரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் S. விஜயகுமார்
No comments