Breaking News

மணலூர்பேட்டையில் ஒரே நாளில் இரண்டு இடங்களில் பூட்டை உடைத்து திருட்டு.


கள்ளக்குறிச்சி மாவட்டāம் மணலூர்பேட்டை பேரூராட்சியில் திருவரங்கம் ஊராட்சியை சேர்ந்த கர்ணா என்பவர் திருவண்ணாமலை செல்லும் சாலையின் இடது இரும்பு தகர சீட் மூலம் செட் அமைத்து சத்யா உணவகம் என்ற பெயரில் கடந்த 2023 ம் ஆண்டு முதல் ஓட்டல் கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் கடந்த 22ஆம் தேதி இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று உள்ளார். மீண்டும் நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு கடையை திறந்து பார்த்தபோது கடையின் பின்புறத்தில் உள்ள இரும்பு தகர சீட் போடப்பட்டுள்ள அதனை நீக்கிவிட்டு கடையின் உள்ளே இருந்த கல்லாப்பெட்டியை உடைத்து அதில் இருந்த 5,000/-  பணம் மற்றும் கடைக்கு பயன்படுத்திய  விவா போன் திருடு போய் உள்ளது.

மேலும் விக்னேஷ் என்பவர் மணலூர்பேட்டை பேரூராட்சியில் ஆற்றுப்பாலம் செல்லும் இறக்கத்தில் ஆண்டவர் ஸ்டில் என்ற பெயரில் கடந்த 2022 ம் ஆண்டு முதல் இரும்புகம்பி கடை வைத்து நடத்தி வருகின்றார். இவர் கடந்த 22 ஆம் தேதி மாலை 4 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்று உள்ளார். மீண்டும் நேற்று முன் தினம் காலை 10:30 மணிக்கு கடையை திறந்து பார்த்தபோது கடையின் பின்புறத்தில் உள்ள இரும்பு தகர சீட் போடப்பட்டுள்ள அதனை நீக்கிவிட்டு கடையின் உள்ளே இருந்த கல்லாப்பெட்டியை உடைத்து அதில் இருந்த 25,000/- பணத்தை திருடி உள்ளார்கள். மேற்படி திருட்டு சம்பவ குறித்து காவல் உதவி ஆய்வாளர் திருமால் அவர்கள் விசாரணை செய்து வருகிறார்.

No comments

Copying is disabled on this page!