சிங்கம்புணரிஅருகே மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்! உற்சாகமாக கண்டு களித்த ரசிகர்கள்!!
இந்த மாட்டுவண்டி பந்தயத்தில் பெரியமாடு பிரிவில் 14 ஜோடிகள், சின்ன மாடு பிரிவில் 40 ஜோடிகள் என மொத்தம் 54 ஜோடிகள் பங்கேற்றன. இதில் பெரிய மாடு பிரிவிற்கு 8 மையில் தூரமும், சின்ன மாடு பிரிவிற்கு 6 மையில் தூரமும் எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டி நடைபெற்றது. இதில் சின்ன மாடு பிரிவில் அதிக அளவில் மாடுகள் பங்கேற்றதால் இரு பிரிவுகளாக பந்தயம் நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்க சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் தங்கள் மாடுகளுடன் கலந்து கொண்டனர். விடாமுயற்சியோடு போராடி எல்கையில் கொடியை வாங்கி வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கும், அதை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்க தொகையும், பரிசுகளும் விழா குழுவின் சார்பில் வழங்கப்பட்டது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த மாட்டுவண்டி போட்டியிணை காண காலை 6 மணி முதல் சாலையின் இருபுறங்களில் நின்று ஏராளமான ஆண்கள் பெண்கள், குழந்தைகள் மற்றும் ரசிகர்கள் என, ஆயிரக்கணக்கானோர் உற்சாகதோடு கண்டுகளித்தனர். நடைபெற்ற விழாவில் மாவட்ட கழக செயலாளர் திருவேங்கடம், உயர் மட்டக்குழு உறுப்பினர்களான ஜாகிர் உசேன், பன்னீர்செல்வம், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், ஒன்றிய கழகச் செயலாளர் ராமதாஸ், சிங்கம்புணரி நகர் கழகச் செயலாளர் சிவக்குமார், கிராம அம்பலகாரர் பார்த்திபன், மற்றும் மாவட்ட ஒன்றிய பேரூர் நகரக் கழக கிளைக் கழக நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட மன்ற செயலாளர் சோணமுத்து செய்திருந்தார். தொடர்ந்து சுமார் 2000 பேருக்கு விழா குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
No comments