Breaking News

மானாமதுரை அருகே மர்ம நபர்கள் இளைஞரை வெட்டி கொலை செய்ததை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்.


சிவகங்கை மாவட்டம். மானாமதுரை அருகே உள்ள கீழப்பசலை பகுதியைச் சேர்ந்த ராஜா மகன் பிரவீன்குமார்(22). இவர் நேற்று இரவு கோயம்புத்தூரிலிருந்து தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார்.  


மானாமதுரை பேருந்து நிலையத்தில் இருந்து அவரது நண்பர்கள் 3 பேருடன் இருசக்கர வாகனத்தில்  கீழப்பசலை கிராமத்துக்கு சென்றதாகவும், சங்கமங்கலம் அருகே இவர்களை வழிமறித்த மர்ம நபர்கள்  தாக்க முயற்சித்ததாகவும்,  4 பேரும் தப்பிசெல்ல முயன்ற போது, பிரவீன்குமார் அந்தக்கும்பலிடம் சிக்கியுள்ளார். 


இவரை  தீயனூர் பகுதிக்கு கொண்டு சென்று வெட்டி படுகொலை செய்துவிட்டு மர்ம கும்பல் தப்பிச்சென்றதாகவும் கூறப்படுகிறது. தகவல் அறிந்து  சம்பவ இடத்துக்கு சென்ற மானாமதுரை காவல்துறையினர் இளைஞரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக  மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


இச்சம்பவம் குறித்து அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த பிரவீன் உறவினர்கள்  மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவீன் உமேஷ் நேரில் பார்வையிட்டாா்.

No comments

Copying is disabled on this page!