Breaking News

வாணியம்பாடி அருகே வீட்டிலிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை உயிரிழப்பு, நகர போலீசார் விசாரணை.


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடிஅடுத்த நேதாஜி நகர், பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் இவர் கட்டிட மேஸ்திரி ஆக வேலை செய்து வருகிறார்.


இவரது மனைவி தமிழரசி இவர்களது மகன் சர்வேஸ்வரன் (இரண்டரை வயது) இன்று காலை தமிழரசி வீட்டின் வெளியே வேலை செய்து வந்துள்ளார். இப்போது எதிர்பாராத விதமாக  வீட்டின் உள்ளே கட்டப்பட்டிருந்த தண்ணீர் தொட்டியில் குழந்தை தவறி விழுந்தது

பின்பு அவருடைய தாயார் தமிழரசி குழந்தையை பல இடத்தில் தேடியும் கிடைக்காத நிலையில் தண்ணீர் தொட்டியை எட்டிப் பார்த்தபோது  குழந்தை விழுந்து உள்ளது தெரிய வந்தது. என்னைத் தொடர்ந்து குழந்தையை மீட்டு உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்க பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து நகர காவல் துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாணியம்பாடி அருகே வீட்டிலிருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இரண்டரை வயது குழந்தை  உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

- பு.லோகேஷ் திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர்

No comments

Copying is disabled on this page!