Breaking News

திண்டிவனம் அருகே காதலனை மணந்த ஒரே வாரத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த கல்லூரி மாணவி மாணவன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை.


விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த வெள்ளிமேடுப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குடப்பட்ட புலியனூர் கிராமத்தை சேர்ந்த மூர்த்தி என்பவரது மகள் கன்னியம்மாள் (17). இவர் மயிலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகின்றார்.

இந்நிலையில், கடந்த 4- ஆம் தேதி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிற்க்கு சென்ற கன்னியம்மாள் மீண்டும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகின்றது. பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடிய நிலையில் நடுவனந்தல் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது மகன் திண்டிவனம் அரசு கலை கல்லூரியில் 3ஆம் ஆண்டு பி.எஸ்.சி படித்து வரும் அஜித்குமார் (19) என்பவர் கண்ணியம்மாளின் தந்தை மூர்த்தியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கண்னியம்மாளை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக தெரிவித்து விட்டு தொடர்பை துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த மூர்த்தி வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில் அஜித்குமார் திண்டிவனம் காந்தி சிலை அருகே உள்ள ஒரு கடையில் வைத்து கன்னியம்மாவை திருமணம் செய்துள்ளார்.

இதனை அடுத்து நேற்று முன்தினம் காலை கன்னியம்மாவை அழைத்து வந்த அஜித்குமார் அவர்களது பெற்றோரிடம் விட்டுவிட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை 5:30 மணியளவில் கன்னியம்மாள் அவரது வீட்டின் அருகில் உள்ள அவர்களுக்கு சொந்தமான கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார். 

இது குறித்து வெள்ளிமேடுபேட்டை காவல் நிலையத்தில் மூர்த்தி அளித்த புகாரின் பேரில் கன்னியம்மாளின் உடலை கைப்பற்றிய வெள்ளிமேடு பேட்டை போலீசார் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்ததுடன், அஜித்குமாரை கைது செய்து போக்சோ வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments

Copying is disabled on this page!