Breaking News

பொது கழிவறை கட்ட பூமி பூஜை நகர மன்ற தலைவர், நகராட்சி செயற்பொறியாளர் பங்கேற்பு.


மயிலாடுதுறை 29 வது வார்டுக்கு உட்பட்ட இந்திரா நகர் காலனி பகுதியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொது கழிவறை கட்ட பூமி பூஜை நகர மன்ற தலைவர், நகராட்சி செயற்பொறியாளர் பங்கேற்பு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட 29 வது வார்டில் அமைந்துள்ள இந்திரா நகர் காலனி பகுதியில் 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொது கழிப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. நகர மன்ற தலைவர் குண்டாமணி என்கிற செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி செயற்பொறியாளர் மகாதேவன் நகர மன்ற துணைத் தலைவர் எஸ் எஸ் குமார், நகர் மன்ற உறுப்பினர் முனைவர் மா ரஜினி உள்ளிட்டோர் பங்கேற்று பூமி பூஜை செய்து வைத்தனர். ஒப்பந்ததாரர் செந்தில் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

No comments

Copying is disabled on this page!