Breaking News

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி திமுக இலக்கிய அணி சார்பில் நூல்கள் அறிமுக விழா புதுவை தமிழ்ச்சங்கத்தில் நாளை நடக்கிறது.


முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை இந்த ஆண்டு முழுவதும் பட்டிமன்றம், பேச்சுப்போட்டி, கவிதைப் போட்டி, நலத்திட்ட உதவிகள் வழங்கும் பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கலைஞர் அவர்களின் சாதனைகள் மக்களை சென்றடைய வேண்டும் என்று கழகத் தலைவர், தமிழ்நாடு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்கள் அதனடிப்படையில் புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா  தலைமையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழக இலக்கிய அணி சார்பில், இருபெரு நூல்கள் அறிமுக விழா புதுவை தமிழ்ச்சங்கத்தில் நாளை 23–ஆம் தேதி மாலை 6.00 மணிக்கு நடைபெறுகிறது.

இந்த விழாவிற்கு புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் தலைமை தாங்குகிறார். அவைத்தலைவர் எஸ்.பி. சிவக்குமார் முன்னிலை வகிக்கிறார். மாநில இலக்கிய அணி அமைப்பாளர் சீனு. மோகன்தாசு தொடக்கவுரை ஆற்ற, இலக்கிய அணித் தலைவர் கலைமாமணி எம்.எஸ். ராஜா வரவேற்புரை ஆற்றுகிறார்.

முனைவர் நா. சுலோசனா அவர்கள் எழுதிய திரைவானில் கலைஞர் எனும் நூலை திமுக தேர்தல் பணிக்குழுச் செயலாளர் கடலூர் இள. புகழேந்தி அவர்களும், முனைவர் வா.மு.சே. ஆண்டவர் எழுதிய பன்முகநோக்கில் கலைஞரின் படைப்பிலக்கியங்கள் எனும் நூலை புதுச்சேரி மாநில திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் பூ. மூர்த்தி அவர்களும் அறிமுகவுரை ஆற்றுகின்றனர்.

தலைமைச் செயற்குழு உறுப்பினர் சி.பி. திருநாவுக்கரசு, பொருளாளர் இரா. செந்தில்குமார், எம்.எல்.ஏ., இளைஞர் அணி அமைப்பாளர் எல். சம்பத், எம்.எல்.ஏ., தலைமைப் பொதுக்குழு உறுப்பினர்கள் எஸ். கோபால், வே. கார்த்திகேயன், கதிர்காமம் தொகுதி செயலாளர் ப. வடிவேல், மாணவர் அணி அமைப்பாளர் எஸ்.பி. மணிமாறன், மகளிர் அணி அமைப்பாளர் ந. காயத்ரி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் ரோ. நித்திஷ், கலை, இலக்கிய பெருமன்ற தலைவர் எல்லை. சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

நூல் ஆசிரியர்கள் முனைவர் நா. சுலோசனா, முனைவர் வா.மு.சே. ஆண்டவர் ஆகியோர் ஏற்புரை ஆற்றுகிறார்கள். இலக்கிய அணி துணைத் தலைவர் வி.எஸ். பாண்டியன் நன்றியுரை ஆற்றுகிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை இலக்கிய அணி துணை அமைப்பாளர்கள் தர்மராஜ், கலிவரதன், ஆளவந்தார், கோதண்டபாணி, சோமசுந்தரம், கலிமுல்லா, ஜபருல்லா ஆகியோர் செய்கின்றனர். 

No comments

Copying is disabled on this page!