Breaking News

நெல்லையில் தனி நபரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள பார்வையற்றோர் பள்ளிக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தரக்கோரி முன்னாள் மாணவர்கள் முற்றுகை போராட்டம்; அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


நெல்லை பாளையம் பாளையங்கோட்டையில் இங்கி வரும் பார்வையற்றோர் பள்ளிக்கு நெல்லை மாவட்டம் சத்திரம் புதுக்குளத்தைச் சேர்ந்த பிரமு என்பவர் தச்சநல்லூரில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தை கடந்த 1984ஆம் ஆண்டு எழுதிக் கொடுத்துள்ளார் இதற்கான பத்திரம் முறைப்படி பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் ராமர் என்பவர் மேற்கண்ட நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து அங்கு கட்டிடம் கட்டி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு அரசு துறைகளில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து ஆக்கிரமிப்பு செய்துள்ள நிலத்தை மீட்டு தர கோரி இன்று பார்வையற்ற பள்ளி மாணவர்கள் சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகளான முன்னாள் மாணவர்கள் தச்சநல்லூரில் உள்ள சம்பந்தப்பட்ட இடத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர் சும்மா 100க்கும் மேற்பட்டோர் இந்த முற்றுகை போராட்டத்தில் பங்கேற்று பள்ளி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த கயவர் மீது நடவடிக்கை எடு கண்டன கோஷம் எழுப்பினர் இதையடுத்து அங்கு வந்த வட்டாட்சியர் (பொறுப்பு) பார்வதி, வருவாய் ஆய்வாளர் சுதா மற்றும் காவல் உதவி ஆணையர் வெங்கடேஷ் ஆகியோர் மாற்றுத்திறனாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பள்ளிக்கு சொந்தமான நிலத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். 

இருப்பினும் நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர் பவுல் செல்வராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments

Copying is disabled on this page!