புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சியின் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமினை புதுச்சேரி மாநில பொருப்பாளர் நிர்மல் குமார் சுரானா தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி மரப்பாலம் சந்திப்பில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமின் தொடக்க விழா இன்று நடைபெற்றது.
பாஜக மாநில தலைவர் செல்வகணபதி தலைமையில் நடைபெற்ற விழாவில் மாநில பொதுச்செயலாளர் மோகன்குமார், மாநில துணை தலைவர் ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மாநில பொருப்பாளர் நிர்மல் குமார் சுரானா கலந்து தொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமினை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நமச்சிவாயம்,சாய்.சரவணன் குமார், முதல்வரின் பாராளுமன்ற செயலர் ஜான் குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ரிச்சர்ட் ஜான் குமார், ராமலிங்கம், வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டு செல்போன் மூலம் மிஸ்டு கால் கொடுத்து உறுப்பினர் சேர்க்கையை துவக்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில மற்றும் மாவட்ட,தொகுதி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
- இரா. சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments