Breaking News

உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூர் கிராமத்தில் அரசு பேருந்து மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து ஒருவர் உயிரிழப்பு.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மேட்டு பாச்சா பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் ஏழுமலை வயது 37.  கரும்பு வெட்டும் தொழிலாளி ஆன இவர் சொந்த வேலை காரணமாக இன்று மாலை உளுந்தூர்பேட்டைக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்தவர் பின்னர் மீண்டும் பாச்சா பாளையம் கிராமத்திற்கு செல்வதற்காக உளுந்தூர்பேட்டை திருவெண்ணைநல்லூர் சாலையில் சென்றுள்ளார். 

செல்லும் வழியில் பாண்டூர் தனியார் பெட்ரோல் பங்க் அருகில் ஏழுமலை ஓட்டிச் சென்ற இரு சக்கர வாகனம் எதிரே வந்த அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் ஏழுமலை சம்பவ இடத்திலேயே முகம் சிதைந்து உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். 

உயிரிழந்த ஏழு மலைக்கு பரத் பாரதி மற்றும் சரத் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். உளுந்தூர்பேட்டை அருகே கரும்பு வெட்டும் தொழிலாளி அரசு பஸ்ஸில் மோதி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments

Copying is disabled on this page!