Breaking News

நந்தியம்பாக்கம் ஊராட்சியில் ரூ.2.36 லட்சம் சாலைப் பணிக்காக பூமி பூஜை.


திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில், நந்தியம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து தள்ளேரிபாளையம் கிராமம் வரை சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திலான சாலை கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலை இருந்தது. இந்த சாலை வழியாக நந்தியம்பாக்கம் ஊராட்சி சேர்ந்த கிராம மக்கள் கொரஞ்சூர் ரெட்டிப்பாளையம், தமிழ் கொரஞ்சூர், மவுத்தம்பேடு, செப்பாக்கம் உள்ளிட்ட கிராம மக்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சென்று வந்தனர். 

போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள சாலையை புதுப்பித்து தர வேண்டும் என்ற பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி மூலம் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர். இதனையடுத்து பிரதம மந்திரி சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புதிய சாலை அமைப்பதற்காக ரூபாய் 2 கோடியே 36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து புதிய சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. 

இதில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே.ரமேஷ்ராஜ் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி, வார்டு உறுப்பினர்கள் வள்ளி, விஸ்வநாதன், காதர் பாஷா, தினேஷ்குமார், ஊராட்சி செயலர் பொற்கொடி, தொழிலதிபர் கார்த்திக், மதன், பாலன், கலாநிதி, ஜெகன், வெங்கடேஸ்வரா ராமதாஸ், முருகன், சுரேந்தர் ஒப்பந்ததாரர் தங்கதுரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!