Breaking News

தூத்துக்குடி மாநகராட்சி 60 வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் முழுமையாக நிறைவேற்றி தருவேன்: மேயர் ஜெகன் பெரியசாமி.


தூத்துக்குடி மாநகராட்சியில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் மண்டலம் வாரியாக பொதுமக்களின் குறைகளை நிறைவேற்றும் வண்ணம், பொதுமக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தெற்கு மண்டல அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மேயர் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் மதுபாலன் முன்னிலை வகித்தார். 

தெற்கு மண்டலத்தலைவர் பாலகுருசாமி வரவேற்று பேசினார். இக்கூட்டத்தில் பிறப்பு இறப்பு சான்றிதழ், முகவரி மாற்றம், புதிய குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்பு, கட்டடி அனுமதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுகளை பொதுமக்கள் அளித்தனர். அவர்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு மேயர் ஜெகன் பெரியசாமி பேசுகையில்: தமிழ்நாடு முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு அவரது ஆணைக்கிணங்க மழைநீர் தேங்கிய பகுதியில் புதிய கால்வாய் பணிகள் சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

வடகிழக்கு பருவமழை தொடங்க இருப்பதையொட்டி முன்னெச்சரிகை நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நான் மக்களிடம் அளித்த வாக்குறுதியின்படி மாநகராட்சியின் 60 வார்டுகளிலும் அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்றி கொடுப்பேன் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில், துணை ஆணையர் ராஜாராம், உதவி பொறியாளர் சரவணன், தெற்கு மண்டல உதவி ஆணையர் கல்யாணசுந்தரம், நகரமைப்பு திட்ட செயற்பொறியாளர் ரெங்கநாதன், கண்காணிப்பாளர் குருவையா, நகர்நல அலுவலர் வினோத்ராஜா, இளநிலை பொறியாளர் செல்வம், சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, குழாய் ஆய்வாளர் நிக்சன், திட்ட அலுவலர் ஆறுமுகம், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயகுமார், பட்சிராஜ், சுயம்பு, ராஜேந்திரன், முத்துவேல், வெற்றிச்செல்வன், வடக்கு மாவட்ட திமுக தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் விஜயகுமார், ஸ்பிக்நகர் பகுதி மகளிர் அணி அமைப்பாளர் மாலாசின்கா, வட்டச்செயலாளர்கள் பிரசாந்த், செல்வராஜ், முத்துராஜா, முன்னாள் கவுன்சிலர்கள் நவநீதன், சாமுவேல்ஞானதுரை, போல்பேட்டை பகுதி பிரதிநிதிகள் பிரபாகர், ஜேஸ்பர் ஞானமார்ட்டின், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!