மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது சிலைக்கு கவர்னர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி,சபாநாயகர்,அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தையொட்டி பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது சிலைக்கு கவர்னர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நாள் புதுச்சேரி அரசு சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி பாரதி பூங்காவில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன்,முதலமைச்சர் ரங்கசாமி,சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் லட்சுமி நாராயணன்,திருமுருகன்,சட்டப்பேரவைத் துணைத் தலைவர் ராஜவேலு, அரசு கொறடா ஏகேடி ஆறுமுகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கேஎஸ்பி ரமேஷ், ராமலிங்கம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து ஈஸ்வரன் கோயில் வீதியில் அமைந்துள்ள மகாகவி பாரதியார் நினைவு அருங்காட்சியகத்தில் மகாகவி பாரதியாரின் திருவுருவப்படத்திற்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. விழாவின் நிறைவாக மகாகவி பாரதியாரின் தேச பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டன.
- இரா.சரவணன் செய்தியாளர் புதுச்சேரி
No comments