திண்டிவனம் அருகே டேபிள் பேன் ஒயரில் கைவத்த 3 வயது குழந்தை; மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலி.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த இளவளப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் இவர் கும்பகோணத்தில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் தலைமை சமையலறாக உள்ளார். இவர் மற்றும் இவரது குடும்பத்தினர் இளவளப்பாக்கம் கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
சரவணன் மனைவி கருத்தம்மாள் இருவருக்கும் இரண்டு மகன்கள் அதில் மூத்த மகன் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் அவரது இளைய மகன் இசை அமுதன் (3) வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்பொழுது அருகில் ஓடிக்கொண்டிருந்த டேபிள் பேன் ஒயரில் குழந்தை இசை அமுதன் கை வைத்துள்ளான் அதிலிருந்து மின்சாரம் குழந்தையின் மீது பாய்ந்துள்ளது.
திடீரென அவனது அலறல் சத்தம் கேட்டு வெளியே இருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது சுயநினைவின்றி குழந்தை இருந்துள்ளான். இதனை அடுத்து குழந்தையை திண்டிவனம் அரசு பொது மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு குழந்தை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவலறிந்த பிரம்மதேசம் போலீசார் குழந்தையின் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments