ராகுல் காந்தியை கண்டித்து பாஜக ஓ.பி.சி. அணிசார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்த இந்திய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இட ஒதுக்கீடு குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்ததாக கூறி இதற்கு கண்டனம் தெரிவித்தும் மன்னிப்பு கேட்க வலியுறுத்தியும் பாஜக ஓபிசி அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட ஓபிசி அணி மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் முருகதாஸ், முன்னாள் மாவட்ட தலைவர் சேனாதிபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாஜக முன்னாள் மாநில துணைத்தலைவர் அருள் முருகன் கண்டன உரையாற்றினார். இதில் பாஜக ஓபிசி அணி மாநில செயற்குழு உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
No comments