Breaking News

உளுந்தூர்பேட்டை அருகே கணையார் கிராமத்தில் அய்யனார் சடையப்பர் சுவாமி கும்பாபிஷேகம் நடைபெற்றது.


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை வட்டம் கணையார் கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பூரணிபுஷ்கலா சமேதா அய்யனார் சுவாமி ஆலய  ஸ்ரீ கருப்ப சுவாமி மற்றும் பெரியநாயகி சமேதா சடையப்பர் சுவாமி நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்  வெகு விமர்சியாக நடைபெற்றது  இதில்  யாகசாலையில் புனித  கலசங்கள் வைத்து ஆச்சாரியார்கள் மந்திரங்கள்  முழங்க  கலசங்களை தலையில் சுமந்து கொண்டு கோபுர கலசத்தில் நீர் ஊற்றினர்கள்  அந்த புனித நீர் பொதுமக்கள் மீது தெளிக்கப்பட்டது.

கும்பாபிஷேகத்தில் சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன்,மற்றும் சாரதா ஆசிரம நிர்வாகி  யத்தீஸ்வரி ஆத்ம விகாசப்ரிய அம்பா, மற்றும் திமுக ஒன்றிய அவைத்தலைவர் கணையார் விஜயன், கணையார்  ஊராட்சி மன்ற தலைவர் சிவானந்தம்,  அரசு வழக்கறிஞர் இளமுருகன், ரோட்டரி சங்க முன்னாள் தலைவர் ரமேஷ் பாபு, ஊர் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

No comments

Copying is disabled on this page!