தரங்கம்பாடி பேரூராட்சி பகுதியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி பேரூராட்சி பகுதியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது தரங்கம்பாடி பேரூராட்சி நிர்வாகம் மற்றும் பொறையார் பகுதியில் உள்ள தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரி மாணவ மாணவிகள் இணைந்து போதை பொருளுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
போதை பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் போதை பொருளை முற்றிலுமாக தடுக்க வலியுறுத்தியும் போதைப்பொருள் பயன்பாட்டை தடை செய்ய வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பியவாறு பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி சென்றனர் பேரூராட்சி அலுவலர்கள் கல்லூரி பேராசிரியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
No comments