Breaking News

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தூய்மை சேவைக்கான விழிப்புணர்வு.


ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த முப்பத்துவெட்டி கால்நடை மருந்தகத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக மதிப்பிற்குரிய இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் டாக்டர்.J.U.சந்திரகலா, I.A.S., அவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்கள். முப்பத்துவெட்டி தலைவர்  Dr.S.சுமதி சீனிவாசன், துணை தலைவர் R.L.பழனி, ஒன்றிய குழு உறுப்பினர் R.சரண்ராஜ், உதவி இயக்குநர் (தணிக்கை) ச.பாரி, வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) சைபுதின், வட்டாட்சியர்  பாக்யலட்சுமி கிராம நிர்வாக அலுவலர் சுகுமார் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். 

“என் நகரத்தை தூய்மையாகவும் சுத்தமாகவும் வைத்திருப்பேன்” என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகைகள் கையில் பிடித்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். தூய்மையை வலியுறுத்தும் வகையில் மேல்விஷாரம்‌ தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சார்பில் பங்கேற்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் அதிகாரிகள், பள்ளி மாணவர்கள், அசோசியேஷன் நிர்வாகிகள், தூய்மை பணியாளர்கள்,  தூய்மையே சேவை குறித்த விழிப்புணா்வு  உறுதிமொழி ஏற்றனர்

No comments

Copying is disabled on this page!