Breaking News

பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.


வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பங்கேற்பு.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி இஸ்லாமியா பெண்கள் கல்லூரியில் பெண்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது,
இந்நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரேயாகுப்தா, மற்றும் மாவட்ட மனநல மருத்துவர் பிரபாவ ராணி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், கல்லூரி மாணவியர்களிடம் பேசுகையில், பெற்றோர்கள் தங்களின் ஆண் பிள்ளைகளுக்கு பெண் பிள்ளைகளிடம் எப்படி பழக வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுத்து  வளர்க்க வேண்டும், என்றும் ஆண்களைக் காட்டிலும், பன் மடங்கு பெண்கள் வலிமை மிக்கவர்கள், எனவும் தங்களுக்கு நடக்கக்கூடிய, அநீதிகளை குறித்து தைரியமாக கூற முன்வர வேண்டும் என்று பேசினார்.


அதனைத் தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா பேசுகையில் பெண்கள் தங்களுக்கு நடக்கக்கூடிய அநீதிகளை குறித்து தைரியமாக புகார் அளியுங்கள் உங்கள் ரகசியம் காத்து, காவல்துறை உங்களுக்கு துணை நிற்கும் என்று பேசினார், இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் முதல்வர்,தாளாளர், கல்லூரி மாணவிகள் மற்றும்,  வாணியம்பாடி நகர மற்றும் கிராமிய காவல்துறையினர், கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!