சீர்காழி அருகே நெல் கொள்முதல் நிலைய எழுத்தர் விஷம் அருந்தி தற்கொலை முயற்சி.
சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தை சேர்ந்தவர் எஸ்.ஐயப்பன்(47). இவர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழகத்திற்கு உட்பட்ட அகணி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பட்டியல் எழுத்தராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை தர கட்டுப்பாட்டு மேலாளர் மகேஸ்வரி,உதவி தர ஆய்வாளர் கவிநிலவு ஆகியோர் அகணி நேரடி நெல் கொள்முதல் நிலையில் ஆய்வு மேற்கொண்டனராம்.
அப்போது விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் அரைபதத்தில் சுருங்கிய நெல்லாக இருப்பதாக கூறி பட்டியல் எழுத்தர் ஐயப்பனுக்கு ரூ.78ஆயிரம் அபராதம் விதித்துவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. அதிகாரிகள் சென்ற நிலையில் ஐயப்பன் மன உளைச்சலில் இருந்தாராம். அதன் பிறகு அருகிலிருந்த பம்பு செட் அருகே மயங்கிய நிலையில் ஐயப்பன் கிடந்ததாகவும்,அருகே பூச்சிக்கொல்லி மருந்து புட்டி இருந்தநிலையில் அங்கிருந்த லோடுமேன்கள் அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைபெற்று வருகிறார்.
இது குறித்த தகவல் அறிந்த மற்ற நெல் கொள்முதல் நிலைய எழுத்தர்கள்,லோடுமேன்கள் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து சீர்காழி போலீஸôர் விசாரனை செய்துவருகின்றனர்.
No comments