Breaking News

முதல் புரட்டாசி சனிக்கிழமை தென்திருப்பதி என்று அழைக்கப்படும் அரியக்குடி திருவேங்கடமுடையான் ஆலயத்தில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள அரியக்குடி கிராமத்தில் அமைந்துள்ளது அனைத்து மக்களாலும் தென்திருப்பதி என்று அழைக்கப்படும் திருவேங்கடமுடையன் ஆலயம் இந்த ஆலயத்தில் புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர் முன்னதாக திருவேங்கடமுடையானுக்கு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது பக்தர்களுக்கு துளசியும் துளசி தீர்த்தமும் பிரசாதமாக வழங்கப்பட்டது.

அதுமட்டுமல்ல 2024 இந்தஆண்டு புரட்டாசி மாதத்தில் நான்கு சனிக்கிழமைகள் வருகிறது இந்த நான்கு சனிக்கிழமைகளுமே மிக முக்கியமானவை அதிக சிறப்படையாகும் புரட்டாசி முதல் சனிக்கிழமை மகா சங்கடஹர சதுர்த்தி மட்டுமல்ல இன்னாளில் மகாபாரணியும் இணைந்தே வருகிறது புரட்டாசி இரண்டாவது சனிக்கிழமை ஏகாதசியுடன் இணைந்து இரண்டாவது சனிக்கிழமை வருகிறது புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை நவராத்திரி காலத்துடன் இணைந்து வருகிறது அதனால் இந்த சனிக்கிழமையும் சிறப்பு வாய்ந்தது நான்காவது சனிக்கிழமை அதாவது கடைசி சனிக்கிழமை பெருமாளுக்கு உரிய திருவோணம் நட்சத்திரத்துடன் விஜயதசமி நாளுடன் இணைந்து வருகிறது இந்த கடைசி புரட்டாசி சனிக்கிழமை அதனால் இந்த ஆண்டு வரும் நான்கு சனிக்கிழமைகளும் மிகப் பிரசித்தி பெற்றவை ஆகும். 

No comments

Copying is disabled on this page!